மாற்றுத்திறனாளி நலனுக்காக சிறந்த சேவை புரிந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருது – தமிழக அரசு
மாற்றுத்திறனாளி நலனுக்காக சிறந்த சேவை புரிந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக அரசின் மாநில விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, சிறந்த மாவட்ட ஆட்சியராக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் நாகப்பட்டினம் ஆட்சியர் அருண் தம்புராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த மருத்துவராக நாகபட்டினத்தை சேர்ந்த டாக்டர்.ஜெய்கணேசன் மூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மற்றும் சிறந்த நிறுவனங்களுக்கான விருதுகள் (மாவட்ட ஆட்சியர் தவிர) 2022 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவின் போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும். மேலும், மாவட்ட ஆட்சியருக்கான விருதினை மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.