செஸ் ஒலிம்பியாட் – தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு..!
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு.
மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை, வெளிநாட்டவரும் வியக்கும் வகையில் சிறப்பாக நடத்தி முடித்துள்ள தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை, வெளிநாட்டவரும் வியக்கும் வகையில் சிறப்பாக நடத்தி முடித்துள்ள தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
அதேபோல, தனிநபர் பிரிவில் தங்கம் வென்று, சாதனை படைத்துள்ள தமிழக வீரர் குகேஷுக்கு வாழ்த்துகள். மேலும், தனி நபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா மற்றும் ஓபன் பிரிவில் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர், மகளிர் அணியினருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.
தொடர்ந்து சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் வென்று, தேசத்துக்குப் பெருமை தேடித்தர வேண்டுமென வாழ்த்துகிறோம்.’ என பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் வென்று, தேசத்துக்குப் பெருமை தேடித்தர வேண்டுமென வாழ்த்துகிறோம்.(3/3)#MakkalNeedhiMaiam #KamalHaasan #MNM4sports#MNMTN #MNMKH #ChessOlympiad2022
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) August 10, 2022