ஆகஸ்ட் 10 வரை இந்தியா-வியட்நாம் விமான டிக்கெட்டுகளுக்கு 88 சதவீத தள்ளுபடி!!!

நேற்று ஆகஸ்ட் இரட்டை நாள் 8/8 ஐக் கொண்டாடும் வகையில், வியட்ஜெட் தனது இந்திய ஃப்ளையர்களுக்கு மூன்று கோல்டன் நாட்களில் சிறந்த சலுகைகளைப் பெற கவர்ச்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

அந்த திட்டத்தில், 88 சதவீதம் வரை தள்ளுபடியில் 888,888 விளம்பர டிக்கெட்டுகளை வழங்குகிறது. ஆகஸ்ட் 15, 2022 முதல் மார்ச் 26, 2023 வரையிலான பயணத்திற்கு வியட்நாம் மற்றும் சர்வதேச இடங்களுக்கும் மற்றும் அனைத்து உள்நாட்டு வழித்தடங்களுக்கும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

ஆகஸ்ட் 8 முதல் ஆகஸ்ட் 10, 2022 இரவு 10:30 மணி வரை (IST), வியட்ஜெட் நிறுவனத்தின் இணையதளமான வியட்ஜெட் ஏர் இல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது கட்டணங்களில் 88 சதவீதம் வரை தள்ளுபடி பெற VIETJET88 என்ற குறியீட்டைப் பயன்படுத்தவும்.

இந்தியாவின் புது தில்லி, மும்பை, அகமதாபாத், ஹைதராபாத் மற்றும் பெங்களூருவிலிருந்து வியட்நாமின் தலைநகர் ஹனோய், ஹோ சி மின், ஆசியாவின் புகழ்பெற்ற கடலோர நகரமான டா நாங் போன்ற 17 வழித்தடங்களுக்கும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

வியட்நாமில் இருந்து ஆசியா முழுவதும் உள்ள  டோக்கியோ, ஒசாகா, ஃபுகுவோகா, நகோயா, சியோல், பூசன், பாலி, பாங்காக், ஃபூகெட், சிங்கப்பூர், கோலாலம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு இணைப்பு விமான டிக்கெட்டுகளையும்  வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யலாம்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்