காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் 4ம் இடத்துக்கு முன்னேறிய இந்தியா!
காமன்வெல்த்தில் 20 தங்கம் பதக்கம் வென்று பதக்க பட்டியலில் 4-ஆவது இடத்துக்கு முன்னேறிய இந்தியா.
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. 72 நாடுகள் பங்கேற்றுள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், இந்திய வீரர்கள் அசத்தி வருகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் 4ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது இந்தியா. அதன்படி, இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த்தில் 20 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் வென்று பதக்க பட்டியலில் 4ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது இந்தியா. 66 தங்கத்துடன் ஆஸ்திரேலியா, 55 தங்கத்துடன் இங்கிலாந்து, 26 தங்கத்துடன் கனடா ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களில் உள்ளன.