சாஸ்த்ரா பல்கலை. நீர்நிலையில் அமைந்துள்ளதா? – ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவு
வழக்கு முடியும் வரை கல்வி நிறுவன கட்டிடம் உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் என உத்தரவு.
தஞ்சை சாஸ்த்ரா கல்வி நிறுவனம் நீர்நிலையில் அமைந்துள்ளதா? என்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு முடியும் வரை கல்வி நிறுவன கட்டிடம் உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
நீர்நிலையில் அமைந்துள்ளதால் மாற்று இடம் வழங்க அனுமதிக்கும் அரசாணை பொருந்தாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆக்கிரமிப்பு அகற்ற செல்லும்போது முதலில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் வலியுறுத்தியதாகவும் அரசு தரப்பில் கூறியுள்ளது. எனவே, சாஸ்த்ரா கல்வி நிறுவனம் தொடர்ந்த வழக்கை ஆக.25க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்து.