#BREAKING: தாக்கலானது மின்சார சட்டத்திருத்த மசோதா.. நிலைக் குழுவுக்கு அனுப்பி வைப்பு!

Default Image

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல். 

மின்சார சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மின்சார சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில்  மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தாக்கல் செய்தார்.  மின் கட்டணங்களை ஒழுங்குமுறை ஆணையங்களே மாற்றியமைக்க புதிய சட்டத்தில் கூடுதல் அதிகாரம் என கூறப்படுகிறது.

மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. குறைந்தபட்சம், அதிகபட்ச மின் கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாகவும் சட்டத்தில் திருத்தம்  கொண்டுவரப்படுகிறது. உற்பத்தி செலவுக்கு இணையாக கட்டணம் இருந்தால் விநியோக நிறுவனங்களை சிறப்பாக நடத்த முடியும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மானியத்தை கணக்கில் கொள்ளாமல் மின் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது சட்டத்தின் முக்கியம் அம்சம் என்பது குறிப்பிடப்படுகிறது.  மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அறிமுக நிலையிலேயே எதிர்ப்புகளை தெரிவித்தனர். மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், மின்சார சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ள மின்வாரியம் மத்திய அரசின் ஆணையத்தின் கீழ் செல்லும் என்பதால் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்