வருமானம் இரட்டிப்பாகுமா? பண வீக்கம் உண்மை மதிப்பை சரித்து இரட்டிப்பாக்குமா? – சு.வெங்கடேசன் எம்.பி
உள்துறை அமைச்சரே. வருமானம் இரட்டிப்பாகுமா? பண வீக்கம் உண்மை மதிப்பை சரித்து இரட்டிப்பாக்குமா? சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் விவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்க வேண்டும் என திட்டமிடப்பட்ட இலக்கை அதற்கு முன்பாகவே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செய்து முடிக்கும் என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், அமித்ஷா பேசிய செய்தியினை பதிவிட்டு, ‘விவசாயிகளின் வருமானம் 2022 க்குள் இரட்டிப்பாகும் – அமித்ஷா. உள்துறை அமைச்சரே. வருமானம் இரட்டிப்பாகுமா? பண வீக்கம் உண்மை மதிப்பை சரித்து இரட்டிப்பாக்குமா? 51 சதவீத பண மதிப்பிழப்பு 8 ஆண்டுகளில். 2014 ல் இருந்த பணமதிப்பின்படி இன்று மும்மடங்கு. சொல்வதைத் தாண்டி செய்வது இதுதானா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
விவசாயிகளின் வருமானம் 2022 க்குள் இரட்டிப்பாகும் – அமித்ஷா.
உள்துறை அமைச்சரே.
வருமானம் இரட்டிப்பாகுமா? பண வீக்கம் உண்மை மதிப்பை சரித்து இரட்டிப்பாக்குமா?
51 சதவீத பண மதிப்பிழப்பு
8 ஆண்டுகளில்.2014 ல் இருந்த பணமதிப்பின்படி இன்று மும்மடங்கு.
சொல்வதைத் தாண்டி செய்வது இதுதானா? pic.twitter.com/XWTCccGABJ
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 8, 2022