மாணவர்கள் கவனத்திற்கு! பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பு!
நீட் தேர்வு முடிவு வெளியான பின் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டம்.
ஆகஸ்ட் 16 முதல் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், கலந்தாய்வு தொடங்கும் தேதி தள்ளிப்போக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நீட் தேர்வு முடிவு வெளியான பின் பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
நீட் முடிவுக்கு பின் பல மாணவர்கள் கல்லூரிகளை விட்டு வெளியேறலாம் என்பதால் கலந்தாய்வு தள்ளி போகிறது. எனவே, விரைவில் புதிய பொறியியல் கலந்தாய்வு அட்டவணையை வெளியிட உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதனிடையே, Engineering படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வரும் 18-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. நடப்பு கல்வியாண்டிலேயே புதிய பாடத்திட்டம் அமலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.