திருச்செந்தூரில் கமலஹாசனுக்கு தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு..!
திருச்செந்தூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனுக்கு தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்த்தைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட கமல் பனங்குடியில் பேசுகையில் மக்கள் நீதி மய்யத்தின் வழிகாட்டிகள் மக்கள்தான் என்றும், மக்களின் தேவையை அறியாமல் எதுவும் செய்ய முடியாது என்பதால் நேரில் சந்திக்க வந்ததாகவும் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கமலுக்கு தாரை தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருச்செந்தூர் தேரடி திடலில் உரையாற்றிய அவர், தான் நேசிப்பதும் வணங்குவதும் மனிதனைத்தான் என்று கூறினார். மதங்களும் தெய்வங்களும் தனக்கு இடைஞ்சல் இல்லை என்றும் தானும் அவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கமாட்டேன் என்றும் தெரிவித்தார். அடுத்த மாதம் தங்கள் அமைப்பின் மாணவர்களின் எழுச்சி தெரியவரும் என்றும் கூறினார்