மலேசியாவில் GST க்கு மாற்றாக SST என்ற விற்பனை மற்றும் சேவை வரி ஜூன் ஒன்று முதல் அமல்.!
மலேசியாவில் ஜி.எஸ்.டி.க்கு மாற்றாக எஸ்.எஸ்.டி. எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி ஜூன் ஒன்று முதல் அமலாகிறது. முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கின் ஆட்சியில் 2015ஆம் ஆண்டு ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டது.
ஆனால் இதில் சிக்கல்கள் இருந்ததாக கருத்து எழுந்ததால், ஜி.எஸ்.டி. நடைமுறையை உடனடியாக ஒழிப்பதாக தற்போதைய பிரதமர் மகாதீர் முகமது அறிவித்தார். இதற்குப் பதிலாக பழைய முறையான எஸ்.எஸ்.டி. எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரியையே மீண்டும் அமலுக்கு கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளார்.
ஜூன் ஒன்றாம் தேதி முதல் எஸ்.எஸ்.டி. அமலுக்கு வருவதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆனால் நினைத்த மாத்திரத்தில் எப்படி வரி வசூல் நடைமுறையை மாற்ற முடியும் என நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்