காமன்வெல்த் விளையாட்டு 2022 7ஆம் நாள் – இந்தியாவுக்கு குவியும் பதக்கங்கள்..

2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹெவிவெயிட் பிரிவு இறுதிப் போட்டியில் பாரா பவர்லிஃப்டர் சுதிர்  தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியில் முரளி ஸ்ரீசங்கரின்  8.08 மீ குதித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் விளையாட்டு 2022 இந்தியாவின் நிலை:

தடகளம்: ஆடவர் நீளம் தாண்டுதலின் இறுதிப் போட்டியில் முரளி ஸ்ரீசங்கர் வெள்ளி வென்றார். இப்போட்டியில் போட்டியிட்ட இரண்டாவது இந்தியரான முகமது அனீஸ் யஹியா, 7.97 மீட்டர் பாய்ந்து 5வது இடத்தைப் பிடித்தார்.

தடகளம்: ஹிமா தாஸ் தனது 200 மீ ஹீட் போட்டியில் 23:42 நேரத்துடன் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

பாரா பவர்லிஃப்டிங்: ஆடவர் ஹெவிவெயிட் இறுதிப் போட்டியில் பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிர் தங்கப் பதக்கம் வென்றார்.

பேட்மிண்டன்: பி.வி.சிந்து தனது மகளிர் ஒற்றையர் பிரிவை 21-4, 21-11 என்ற செட் கணக்கில் மாலைதீவைச் சேர்ந்த நபாஹா அப்துல் ரசாக்கை எதிர்த்து R32 இல் வெற்றி பெற்றார். ஆடவர் ஒற்றையர் 32வது சுற்றில் ஸ்ரீகாந்த் 21-9, 21-9 என்ற செட் கணக்கில் உகாண்டாவின் டேனியல் வனாக்லியாவை வீழ்த்தினார்.

குத்துச்சண்டை: அமித் பங்கால் (ஆண்கள் 51 கிலோ), ஜெய்ஸ்மின் லம்போரியா (பெண்கள் 60 கிலோ), சாகர் அஹ்லாவத் (ஆண்கள் +91 கிலோ) கால் இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர். குத்துச்சண்டையில் இந்தியாவின் பதக்கம் 6 ஆக உயர்ந்துள்ளது.

ஹாக்கி: ஆண்கள் அணி இறுதி குரூப் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, குரூப் பிரிவில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

டேபிள் டென்னிஸ்: மானிகா பத்ரா பெண்கள் ஒற்றையர் 16வது சுற்றுக்கு முன்னேறினர். பத்ரா மற்றும் ஜி சத்தியன் ஆகியோர் கலப்பு இரட்டையர் சுற்றில் 16க்கு அசந்தா ஷரத் கமல் மற்றும் ஸ்ரீஜா அகுலாவுடன் இணைந்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்