#CUETExam: CUET நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு!
தொழில்நுட்ப கோளாறு காரணமாக CUET நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு.
இரண்டாம் கட்ட CUET – UG தேர்வுக்கான ஹால் டிக்கெட் சமீபத்தில் https://cuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 4,5,6 ஆகிய தேதிகளில் CUET – UG 2-ம் கட்ட தேர்வு நடைபெற உள்ளது என்றும் 6.80 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக CUET இரண்டாம் கட்ட நுழைவுத்தேர்வு, ஆகஸ்ட் 12, 13, 14ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முதற்கட்ட தேர்வு நடந்து முடிந்த நிலையில், 2ம் கட்டமாக ஆகஸ்ட் 4,5,6,7,8,10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளை சேர்வதற்காக பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான ஜூலை 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை 2 கட்டங்களாக நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
அதன்படி, கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை முதற்கட்ட தேர்வு நடைபெற்று விட்டது. இரண்டாம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.