ஆவின் பொருட்களின் மீதான GST-யை தடுக்கவும் – ஓபிஎஸ்
ஆவின் பொருட்களின் மீதான GST-யை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை.
தரமான மற்றும் சரியான ஆவின் பால் பாக்கெட்டுகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதில், தனிக்கவனம் செலுத்தி “ஆவின் பொருட்களின் மீதான GST-யை தடுக்கவும்” GST விதிப்பிற்கு மேல் விலை உயர்த்தப்படுவதை ரத்து செய்யவும் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், கடந்த சில நாட்களாகவே ஆவின் பால் அளவு குறைவாக இருக்கின்றது என்று மக்கள் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், அதனை நிரூபிக்கும் விதமாக அரை லிட்டர் பாலுக்குப் பதிலாக 430 கிராம் மட்டுமே இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது 500 மி.லி. பால் பாக்கெட்டின் அளவை கிராமில் கணக்கிடும்போது 517 கிராம் இருக்க வேண்டுமென்றும், பால் பாக்கெட் இரண்டு கிராம் இருக்க வேண்டும் என்றும், எந்தவிதத்தில் பார்த்தாலும் / லிட்டர் பாலின் எடை 515 கிராம் இருக்க வேண்டுமென்றும், ஆனால் விற்பனைக்கு வந்த % லிட்டர் பால் பாக்கெட்டின் எடை 430 கிராம் மட்டுமே இருந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன. இது கடும் கண்டனத்திற்கு உரியது.
விலை உயர்வில் கூட ஒரு வெளிப்படையற்ற தன்மை பின்பற்றப்படவில்லை. ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்கும் மேலாக ஆவின் பொருட்களின் விலையை அரசு உயர்த்தியிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எத்தனை சதவிகிதம் வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது என்பதில் கூட ஒரு தெளிவற்ற நிலைமை காணப்படுகிறது. இதுவும் மக்களை ஏமாற்றும் ஒரு செயல்.
எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தனிக் கவனம் செலுத்தி, குறைவான எடையில் பால் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும், ஏழை மக்கள் வாங்கும் ஆவின் பொருட்களின்மீது ஜி.எஸ்.டி. விதிப்பதை தடுத்து நிறுத்தவும், ஜி.எஸ்.டி. விதிப்பிற்கு மேல் ஆவின் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டதை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
தரமான மற்றும் சரியான ஆவின் பால் பாக்கெட்டுகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதில், தனிக்கவனம் செலுத்தி “ஆவின் பொருட்களின் மீதான GST-யை தடுக்கவும்” GST விதிப்பிற்கு மேல் விலை உயர்த்தப்படுவதை ரத்து செய்யவும் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். pic.twitter.com/fOOFj7B6PC
— O Panneerselvam (@OfficeOfOPS) August 2, 2022