#BREAKING: செஸ் ஒலிம்பியாட் – உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி!

Default Image

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி.

சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடரின் 4-வது சுற்று இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றுள்ளார். சர்வதேச தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள நார்வே அணியின் நட்சத்திர வீரர் மேக்னஸ் கார்ல்சன், இன்றைய ஆட்டத்தில் மங்கோலியா வீரர் தம்பசுரன் உடனான ஆட்டத்தில் 30வது நகர்வில் வெற்றியடைந்தார்.

இதுபோன்று, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா பொது பிரிவின் ஏ அணியில் விளையாடி வந்த ஹரிகிருஷ்ணன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பிரான்ஸ் நாட்டு வீரருடன் ஆட்டத்தை சமன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்