#BREAKING: மருத்துவமனையில் தீ விபத்து – 10 பேர் உயிரிழப்பு!

Default Image

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தீ பற்றி, மற்ற பகுதிகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருவதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

தீயை கட்டுக்குள் கொண்டுவரும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சமத்துவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங், தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டும் என அறிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஏரளாமானோர் தீ விபத்தில் சிக்கி, அருகில் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயில் சிக்கி படுகாயமடைந்த 3 பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்