5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஊழல்.! திமுக எம்.பி ஆ.ராசா குற்றசாட்டு.!
5 லட்சம் கோடி வரையில் 5 ஜி ஏலம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 1.5 லட்சம் கோடிவரையில் தான் ஏலம் போயுள்ளளது. – திமுக எம்.பி.ஆ.ராசா குற்றசாட்டு.
5 ஜி அலைக்கற்றை ஏலம் அண்மையில் தான் நடைபெற்று முடிந்தது. இந்த 5 ஜி அலைக்கற்றை மொத்தமாக ரூ.1,50,173 கோடி வரையில் ஏலம் போயுள்ளது. இதில் அதிகபட்சமாக ஜியோ ரூ.88,078 கோடிக்கு அலைக்கற்றையை வாங்கியுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் ரூ.43,048 கோடி ஏலத்தொகைக்கும், வோடஃபோன் – ஐடியா நிறுவனம் ரூ.18,799 கோடி ஏலத்தொகைக்கும், அதானி நிறுவனம் ரூ.212 கோடி க்கும் குறிப்பிட்ட அளவுக்கு அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்துள்ள்ளது.
இது குறித்து குற்றம் சாட்டியுள்ள திமுக எம்.பி ஆ.ராசா கூறுகையில், ‘ 5 லட்சம் கோடி வரையில் 5 ஜி ஏலம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 1.5 லட்சம் கோடிவரையில் தான் ஏலம் போயுள்ளளது. இது திட்டமிடுதலில் குழப்பமா அல்லது மத்திய அரசு சில கம்பெனிகளுடன் சேர்ந்து கூட்டுசதியில் ஈடுபட்டதா என்பதை விசாரிக்க வேண்டும்.’ என நாத பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.