இந்தியாவிலேயே அதிக வரி செலுத்துபவர் என்பதில் பெருமை-அக்ஷய் குமார்
இந்தியாவிலேயே அதிக வரி செலுத்துபவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன்-அக்ஷய் குமார்.
2020-2021 நிதியாண்டிற்க்கான இந்தியாவிலேயே அதிக வரி செலுத்துபவராக அக்ஷய் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் வருமான வரித்துறை சான்றிதழ் அளித்து அவரை கௌரவப்படுத்தியது.
இந்தியாவில் அதிக படத்தில் நடித்துவரும் அக்ஷய் குமார் அதிக சம்பளம் பெற்றுவருகிறார். அதற்கான வருவாய் துறை வரியை தவறாமல் செலுத்தி வருவதால் அவருக்கு இந்த சான்றிதழ் வழங்கபட்டது.
அக்ஷய் குமார் இந்த சான்றிதழ் குறித்து, “இது சிறந்த உணர்வுகளில் ஒன்று, மேலும் நான் நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்” என்று கூறினார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தியாவிலேயே அதிக வரி செலுத்துபவர் அக்ஷய் குமார் என்பது குறிப்பிட்ட தக்கது