அமெரிக்க சபாநாயகர் தைவான் வருகை… 21 ராணுவ விமானங்களை களமிறங்கிய சீனா.!
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் வருகையை ஒட்டி, தைவானை சுற்றி அருகில் உள்ள சீன பகுதிகளில் 21 ராணுவ போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொன்டு வருகிறார். இவர் சிங்கப்பூர், மலேசியா சென்று நேற்று நாளை தைவான் சென்றார்.
தைவானுக்கு நான்சி பெலோசி வர கூடாது என சீனா எச்சரித்தது. ஒருவேளை ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அமெரிக்கா பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார்.
இந்நிலையில், தைவானுக்கு நான்சி பெலோசி வருகையில், ரேடார் சிக்னல்களை கட் செய்து, அவருடைய விமானம் எங்கிருக்கிறது என்று கூட யாருக்கும் தெரியாத வண்ணம் தைவானில் நான்சி பெலோசி தரையிறங்கினார்.
இதனை தொடர்ந்து, தைவானை சுற்றி அருகில் உள்ள சீன பகுதிகளில் 21 ராணுவ போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. மேலும், போர் கப்பல்களையும் தாயார் நிலையில் வைத்து பயம் காட்டுகிறது சீனா.
ஆனால் இதெற்கெல்லாம் பயந்தது போல அமெரிக்க நடந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.