மக்களுக்கு நீதி கிடைப்பது எளிதாக இருக்க வேண்டும் – பிரதமர் மோடி
மக்களுக்கு நீதி கிடைப்பது எளிதாக இருக்க வேண்டும் என டெல்லியில் பிரதமர் பேச்சு.
டெல்லியில், அனைத்திந்திய மாவட்ட சட்ட சேவைகள் வழங்குநர்களின் முதல் கூட்டத்தின் துவக்க நாளில் கலந்து அவர்கள் உரையாற்றினார். இவ்விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் யு.யு.லலித், டி.ஒய். சந்திரசூட், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்
இந்த விழாவில் பேசிய அவர், மக்களுக்கு நீதி கிடைப்பது எளிதாக இருக்க வேண்டும். அது எவ்வளவு எளிதானதாக இருக்க வேண்டும் என்றால் வாழ்வதுபோல், ஒரு தொழில் செய்வதுபோல் எளிதாக இருத்தல் அவசியம் என தெரிவித்துள்ளார்.
மேலும், போக்குவரத்து விதிமீறல் உள்ளிட்ட குற்ற வழக்குகளை விசாரிப்பதற்காக 24 மணி நேர நீதிமன்றங்களும் தொடங்கப்பட்டுள்ளன. விசாரணைக் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த வேண்டும் விசாரணைக் கைதிகளுக்கு சட்ட உதவி வழங்கும் பொறுப்பை மாவட்ட சட்ட சேவை அதிகாரிகள் ஏற்கலாம் என தெரிவித்துள்ளார்.