மகாத்மா காந்தி, சர்தார் படேல் பிறந்த ஊரில் கள்ளச்சாராய விற்பனை நடப்பது வெட்கக்கேடு! – ராகுல் காந்தி
மகாத்மா காந்தி அவர்களும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களும் பிறந்த மண்ணில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது மிகவும் கவலைக்குறியது ராகுல் காந்தி ட்விட்.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக குஜராத்தில் கள்ளச்சாராயம் அருந்திய 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘வறண்டு கிடக்கும் குஜராத்தில் கள்ளச்சாராயத்தால் பல குடும்பங்கள் பாழ் பட்டுக்கிடக்கிறது. பில்லியன் மதிப்புகள் கொண்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்படுகின்றது.
மகாத்மா காந்தி அவர்களும் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களும் பிறந்த மண்ணில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது மிகவும் கவலைக்குறியது. இந்த சட்ட விரோதமான போதை பொருட்களின் தொழிலில் ஈடுபடுவது யார்? இந்த மாஃபியா கும்பலுக்கு உதவும் ஆளும் கட்சி எது?’ என பதிவிட்டுள்ளார்.
‘ड्राई स्टेट’ गुजरात में ज़हरीली शराब पीने से कई घर उजड़ गए। वहां लगातार अरबों की ड्रग्स भी बरामद हो रही है।
ये बेहद चिंता की बात है, बापू और सरदार पटेल की धरती पर, ये कौन लोग हैं जो धड़ल्ले से नशे का कारोबार कर रहे हैं? इन माफिया को कौन सी सत्ताधारी ताक़तें संरक्षण दे रही हैं?
— Rahul Gandhi (@RahulGandhi) July 29, 2022