காமன்வெல்த் 2022 : தென்னாப்பிரிக்காவை எளிதில் வீழ்த்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனைகள்.!
இந்தியா சார்பில், ஸ்ரீஜா அகுலா மற்றும் ரீத் டென்னிசன் ஜோடி மகளிர் இரட்டையர் டேபிள் டென்னிஸில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்து, பர்மிங்காமில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (வெள்ளிக்கிழமை) டேபிள் டென்னிஸ் மகளிர் குழுப் போட்டி நடைபெற்றது.
இதில் இந்தியா சார்பில், ஸ்ரீஜா அகுலா மற்றும் ரீத் டென்னிசன் ஜோடி மகளிர் இரட்டையர் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் தென்னாபிரிக்கா வீராங்கனைகளை எதிர்கொண்டனர்.
அவர்களை 3-0 என்கிற கணக்கில் வெற்றி பெற்றனர். இதனால், இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. மனிகா பத்ரா மற்றும் ஸ்ரீஜா அகுலா இருவரும் ஒற்றையர் பிரிவில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.