பள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க 800 மருத்துவர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு!!

‘மானவர் மனசு’ திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க, 800 மருத்துவர்களை நியமிக்க, முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இத்திட்டம் விரைவில் முதலமைச்சரால் துவக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

“மாநிலம் முழுவதும் உள்ள 413 கல்வித் தொகுதிகளில் தலா இருவர் வீதம் 800 டாக்டர்கள் நியமிக்கப்படுவார்கள். படிப்பு, தொழில் மற்றும் நடத்தை மாற்றங்கள் போன்ற பல்வேறு அம்சங்களில் மாணவர்களுக்கு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கும்,” அமைச்சர் கூறினார்.

இளமைப் பருவப் பிரச்சினைகள், படிப்பின் அழுத்தம், குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள் தொடர்பான பிற சிக்கல்கள் தொடர்பான பதட்டங்களுக்கு மத்தியில் மாணவர்களுக்கு மனநலத்தை மேம்படுத்த இந்தத் திட்டம் உதவும்.

தமிழகத்தில் 2 வாரங்களுக்குள் 4 மாணவிகள், ஒரு ஆண் என 5 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தொடர் தற்கொலை காரணமாக மாநில அரசு இத்தகைய முயற்சியை எடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்