#BREAKING: மேற்கு வங்க அமைச்சர் பதவியில் இருந்து பார்த்தா சாட்டர்ஜி நீக்கம்!
மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, பதவி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு.
ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் சிக்கிய மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். ஆசிரியர் பணி நியமன முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜியிடம் இருந்து 51 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு வங்க எஸ்எஸ்சி ஆட்சேர்ப்பு ஊழலில் ( SSC recruitment scam) குற்றம் சாட்டப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி, ஜூலை 28-ஆம் தேதி (இன்று) முதல் அமைச்சர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்று அறிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பான செய்திகளை தெரிந்துகொள்ள இதனை க்ளிக் செய்யவும் – ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜி வீட்டில் இருந்து மேலும் ரூ.27.9 கோடி ரொக்கம் பறிமுதல்!