என்னைப் பிரச்சாரம் செய்ய அனுமதித்திருந்தால் பாஜக 8 தொகுதிகளிள் நோட்டாவை விட அதிக வாக்குகள் பெற்றிருக்கும்!சுப்பிரமணியன் சுவாமி
104 தொகுதிகள் வென்று கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சியாக பாஜக விளங்கியதையடுத்து அம்மாநில ஆளுநர் பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்து எடியூரப்பாவும் இன்று முதல்வராக பதவிப் பிரமாணம் செய்துவைக்கப்பட்டார்.
பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததற்கு அரசியல் நோக்கர்கள் பல காரணங்களை ஆராய்ந்து வருகின்றனர். பாஜகவும் ஆராய்ந்து வருகிறது. இதில் சுமார் 25க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக டெபாசிட் இழந்ததும் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததற்கு ஒரு முக்கியக் காரணம் என்று அரசியல் கருத்தாளர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், சுமார் 8 தொகுதிகளில் நோட்டாவுக்கும் குறைவாக பாஜக வாக்குகள் பெற்றுள்ளது என்பதைக் காரணம் காட்டிப் பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டிருப்பதாவது,“கர்நாடகாவில் குறைந்தது 8 தொகுதிகளிலாவது பாஜக நோட்டாவுக்கும் குறைவாக வாக்குகள் பெற்றுள்ளது. என்னைப் பிரச்சாரம் செய்ய அனுமதித்திருந்தால் இது நடந்திருக்காது” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.