#BREAKING: இவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் – தலைமை தேர்தல் ஆணையம்
17 வயதானவர்கள் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
நாட்டில் 17 வயது நிரம்பிய இளைஞர்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்வதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இளைஞர்கள் வாக்காளர்களாக பதிவு செய்துகொள்ள 18 வயதாகும் வரை காத்திருக்க தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. எனவே, 17 வயது நிரப்பியவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க மாநில தேர்தல் ஆணையம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
More Opportunities for youth to become part of voters listhttps://t.co/YjseiDgJqy pic.twitter.com/xuhBZNaKNF
— Spokesperson ECI (@SpokespersonECI) July 28, 2022