இயக்குனர் ஜி. எம். குமார் மருத்துவமனையில் அனுமதி..!
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என தமிழ் திரையுலகில் பன்முகத்தன்மை கொண்டவர் ஜி.எம்.குமார். இவர் சிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கடந்த 1986-ம் ஆண்டு வெளியான “அறுவடை பூக்கள்” என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து பிக்பாக்கெட், இரும்புப் பூக்கள், உருவம், உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதை தவிர வெயில், அவன் இவன், ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார். இதில் அவன் இவன் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இந்த நிலையில் ஜி.எம்.குமார் தற்போது திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில் அவர் குணமடைய வேண்டும் என ரசிகர்களும் பிராத்தனை செய்து வருகிறார்கள்.