சேணத்துக்கு வாயைப் பூட்டிக்கொள்ளும் குதிரை கொள்ளுக்கு மட்டும் வாயைப் பிளக்கலாமா? – பீட்டர் அல்போன்ஸ்
உலகமே திரும்பி பார்க்கும் வகையில் நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காகும் செலவினங்களில் ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த நிலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், 187 நாடுகளில் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில், அனைத்து இடங்களிலும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெறவில்லை என பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், சில இடங்களில் விளம்பர பாதாகைகளில் பிரதமர் மோடியின் புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களும், செஸ் ஒலிம்பியாட் தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில், பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உலகமே திரும்பி பார்க்கும் வகையில் நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காகும் செலவினங்களில் ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்பதுதானே உண்மை? சேணத்துக்கு வாயைப் பூட்டிக்கொள்ளும் குதிரை கொள்ளுக்கு மட்டும் வாயைப் பிளக்கலாமா?’ என ட்வீட் செய்துள்ளார்.
உலகமே திரும்பி பார்க்கும் வகையில் நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காகும் செலவினங்களில் ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்பதுதானே உண்மை?
சேணத்துக்கு வாயைப் பூட்டிக்கொள்ளும் குதிரை கொள்ளுக்கு மட்டும் வாயைப் பிளக்கலாமா? @arivalayam @INCTamilNadu pic.twitter.com/Y9G65ImWVe— S.Peter Alphonse (@PeterAlphonse7) July 27, 2022