32 ஆண்டுகள்… இந்தியாவின் முதல் கிரேக்க-ரோமன் U-17 உலக சாம்பியனானார் சூரஜ் வசிஷ்ட்!

Default Image

கிரேக்க-ரோமன் யு-17 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் சூரஜ் வசிஷ்ட்.

இந்தியாவை சேர்ந்த மல்யுத்த வீரர் சூரஜ் வசிஷ்ட், 32 ஆண்டுகளில் கிரேக்க-ரோமன் யு-17 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 16 வயதான அவர் 55 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் ஐரோப்பிய சாம்பியனான அஜர்பைஜானின் ஃபரைம் முஸ்தபாயேவை எதிர்த்து 11-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை வென்றார்.

கடந்த 1990-ம் ஆண்டு 17 வயதுக்குட்பட்டோருக்கான கிரேக்க-ரோமன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கடைசி இந்திய வீரர் பப்பு யாதவ் ஆவார். இதன்பிறகு 32 ஆண்டுகளில் கிரேக்க-ரோமன் யு-17 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் சூரஜ் வசிஷ்ட் ஆவார். கிரேக்க-ரோமன் U17 உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரரான சூரஜ் வசிஷ்ட்டுக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 26122024
MT Vasudevan Nair - Kerala CM Pinarayi Vijayan
World Chess Champion Gukesh - Actor Sivakarthikeyan
BGT2025 - IND vs AUS
Anna University Sexual Harassment case - Accused person Gnanasekaran
Chance of light rain
power outage update