பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.! அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்…
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7.3ஆக பதிவாகியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் இன்று (புதன்கிழமை ) காலை 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமனது பிளிபைன்ஸ் தலைநகர் மணிலா, உள்ளிட்ட சில இடங்களில் உணரப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்படவில்லை. அதனால், உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. பிலிப்பைன்ஸ் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் இந்த நிலநடுக்க அளவை 7.3 ரிக்டர் என அளவிட்டுள்ளது.