சோனியாகாந்தியிடம் 3-வது நாளாக அமலாக்கத்துறை நடத்திய விசாரணை நிறைவு..!

நேஷனல் ஹெரால்ட் விவகாரத்தில் 3-வது நாளாக, அமலாக்கத்துறை சோனியகாந்தியிடம் நடத்திய விசாரணை நிறைவு. 

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை நிறுவனத்தின் பங்குகளை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நெருக்கமான நிறுவனத்திற்கு மாற்றியது தொடர்பாக எழுந்த பணப்பரிவர்த்தனை தொடர்பாக வழக்கு தொடர்பாட்டிருந்தது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்த இந்த விசாரணை கடந்த வாரம் மீண்டும் தொடர்ந்தது அப்போது அவர் அமலாக்க துறையின் முன் ஆஜரானார்.

இந்த வழக்கு தொடர்பாக நேற்று 6 மணிநேரமாக விசாரணை நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்றும் ஆஜராகும் படி அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில், இன்று விசாரணைக்கு ஆஜரானார். சோனியா காந்தியிடம் இன்று நடைபெற்ற விசாரணை தற்போது நிறைவடைந்தது. சோனியாகாந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதற்கு எதிர்ப்பு காங்கிரசார் நேற்று மற்றும் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment