இப்போ இதுதான் திமுக ரைம்ஸ் – ஜெயக்குமார்
செஸ் போட்டியில், விளம்பரத்தில் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தான் உள்ளது என ஜெயக்குமார் விமர்சனம்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு என பல்வேறு வரி உயர்வால் மக்களை வாட்டி வதைக்கு விடியாத அரசாக தான் உள்ளது. இந்த ஆட்சியை பொறுத்தவரையில் நாட்டில் என்ன நடக்கிறது என்ற தெரியாத வகையில், ஒரு சுயநினைவு இழந்த ஆட்சியை தான் நாம் பார்க்க முடியும்.
இந்த ஆட்சியை பொறுத்தவரையில், விளம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. செஸ் போட்டியில், விளம்பரத்தில் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தான் உள்ளது. திமுக ஆட்சியில் இல்லாத பொது modi modi go go என் கூறினர். இப்பொது modi modi come come எனபது தான் திமுகவின் தற்போதைய ரைம்சாக உள்ளது என விமர்சித்துள்ளார்.