மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட்..!
மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று மாநிலங்களவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காரணத்தால், திமுக எம்.பி.க்கள் என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, சண்முகம், கிரிராஜன், கனிமொழி சோமு உள்பட 19 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதேபோல் நேற்று முன்தினம் 4 காங்கிரஸ் எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து இன்று, மாநிலங்களவையில் இருந்து ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 2 நாளில் எதிர்க்கட்சிகளின் 24 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.