சீனாவைப்போல எதிர்க்கட்சியே வேண்டாமா? – பீட்டர் அல்போன்ஸ்
மூடிமறைக்கப்படும் அக்கிரமங்களை வெளிக்கொணர, போராடுவதற்காகத்தானே எதிர்க்கட்சிகள்! சீனாவைப்போல எதிர்க்கட்சியே வேண்டாமா? என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
பாராளுமன்ற ஜனநாயகத்தில்..
மக்கள் பிரச்சினைகளுக்காக,
அரசின் தவறுகளை கண்டிக்க,
அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுத்து நிறுத்த,
இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நிவாரணம் கேட்க,
மூடிமறைக்கப்படும் அக்கிரமங்களை வெளிக்கொணர,
போராடுவதற்காகத்தானே எதிர்க்கட்சிகள்!
சீனாவைப்போல எதிர்க்கட்சியே வேண்டாமா? pic.twitter.com/UCaRk6j4de— S.Peter Alphonse (@PeterAlphonse7) July 27, 2022