உக்ரைன் மீதான தொடர் தாக்குதல்… சர்வதேச விண்வெளி அமைப்பில் இருந்து ரஷ்யா விலகல்.!

Default Image

2024க்கு பிறகு முழுவதுமாக சர்வதேச விண்வெளி அமைப்பில் இருந்து ரஷ்யா விலக முடிவெடுத்துள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரஷ்யா  உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனும் எதிர் தாக்குதல் நடத்தினாலும், ரஷ்யா போன்ற பெரிய வல்லரசு நாட்டுடன் அதனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

ஆரம்பத்தில் உக்கிரமாக இந்த தாக்குதல் தற்போது கொஞ்சம் குறைந்தாலும், இன்னும் ரஷ்யாவின் தாக்குதல் முழுதாக ஓய்ந்தபாடில்லை.

இதனால், அமெரிக்கா முதல், ஆஸ்திரேலியா வரை பல நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை தான் கொண்டுள்ளன. அதனால், ரஷ்யாவின் பொருளாதாரமும் சற்று பாதிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுக்கி வரும் நிலையில், தற்போது ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, உலக நாடுகள் கூட்டமைத்து இருந்து வரும் சர்வதேச விண்வெளி அமைப்பில் இருந்து ரஷ்யா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள்ளது.

வரும் 2024க்கு பிறகு முழுவதுமாக சர்வதேச விண்வெளி அமைப்பில் இருந்து ரஷ்யா விலக முடிவெடுத்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்