கள்ளச்சாராயம் குடித்ததால் இறந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்வு.! 50 பேர் மருத்துவமனையில்….

Default Image

குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. 

குஜராத் மாநிலம் பொடாட் மாவட்டத்தில் மது என்ற பெயரில் மெத்தில் எனும் மரச்சாரயத்தை சிலர் விற்றுள்ளனர். அதனை மது என நினைத்து மதுபிரியர்கள் வாங்கி அருந்தியுள்ளனர்.

இதனை உட்கொண்டவர்களில்  21 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், 20க்கு மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் காலையில் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், அந்த பலி எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. மேலும் , சுமார் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனராம்.

இது குறித்த விசாரணையில் 14 குற்றவாளிகளின் பெயர்களை போலீசார் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளனர். மேலும், அங்கிருந்து 450 லிட்டர் மரச்சாரயத்தை போலிசார் கைப்பற்றியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்