ஹீரோ உதயநிதி.. தயாரிப்பாளர் கமல்ஹாசன்… யாரும் எதிர்பாரா பக்கா மாஸ் அப்டேட்…
தமிழ் சினிமாவில் சமீப காலமாக வெளியாகும் பல பெரிய பட்ஜெட் படங்களை உதயநிதி ஸ்டாலினின் “ரெட் ஜெயிண்ட் மூவிஸ்” நிறுவனம் தான் வாங்கி தமிழக தியேட்டர் உரிமைகளைக் கைப்பற்றியுள்ளனர். அதன்படி, குலுகுலு,கோப்ரா, லால்சிங் சத்தா, திருச்சிற்றம்பலம், வெந்து தணிந்தது காடு, சர்தார், ‘கேப்டன்’ ஆகிய படங்களை இவர்களது பேனரில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் 15- வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, நேற்று சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விழா ஒன்று நடைபெற்றது. அதில் நடிகர் கமல்ஹாசன், அமீர் கான் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து, இந்த விழாவில் ஒரு முக்கியமான அறிவிப்பும் வெளியிடபட்டுள்ளது. அது என்னவென்றால், உதயநிதி ஸ்டாலின் அடுத்ததாக ஹீரோவாக நடிக்கும் ஒரு புதிய படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கமல்ஹாசன் மேடையில் அறிவித்துள்ள்ளார்.
அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உதயநிதி ஸ்டாலின் ட்வீட்டர் பக்கத்தில் “15 வருட ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக உடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம்.
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.