குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் பலி.. 20 பேருக்கு தீவிர சிகிச்சை..

Default Image

குஜராத்தில் மெத்தில் எனப்படும் மரச்சாரத்தை குடித்து 21 பேர் பலியாகியுள்ளனர். 

கள்ளச்சாராயம் குடித்து, எண்ணற்றவர்கள் தொடர்ந்து உயிரிழந்ததை தடுக்கவே, கள்ளச்சாராயம் விற்க , தயாரிக்க தடை போட்டு, அதனையும் மீறி செயல்படுவார்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

ஆனால், அப்படி இருந்தும் சில இடங்களில் கள்ளச்சாராயம் தயாரித்து மதுபிரியர்களுக்கு கொடுத்து பல சமயம் அது எண்ணற்ற உயிரிழப்புகளை ஏற்படுத்தி விடுகிறது.

 அப்படி தான், குஜராத் மாநிலம் பொடாட் மாவட்டத்தில் மது என்ற பெயரில் மெத்தில் எனும் மரச்சாரயத்தை விற்றுள்ளனர். அதனை மது என நினைத்து மதுபிரியர்கள் வாங்கி அருந்தியுள்ளனர்.

இதனை உட்கொண்டவர்களில்  21 பேர் உயிரிழந்துவிட்டனர். 20க்கு மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்த விசாரணையில் மூன்று முக்கிய குற்றவாளிகளின் பெயர்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். மேலும், அங்கிருந்து 450 லிட்டர் மரச்சாரயத்தை போலிசார் கைப்பற்றியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்