பேஸ்புக்கில் புதிய அப்டேட் அறிமுகம்..!
பேஸ்புக் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திய வண்ணம் உள்ளது, அதன்படி பேஸ்பக் பகுதியில் ஸ்டோரீஸ் அம்சத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மூன்று புதிய அம்சங்கள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.
போட்டோ மற்றும் வீடியோக்களை சேமத்து வைக்கும் வசதியை கொண்டுவந்துள்ளது பேஸ்புக் நிறுவனம் இது பல்வேறு பயனர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது.
குறிப்பாக வாய்ஸ் மற்றும் ஸ்டோரிக்களை ஆர்ச்சிவ் செய்யும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு பேஸ்புக்கில் இருக்கும் கேமராவைக் கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்தால் மிக எளிமையாக சேமித்து வைக்க முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாய்ஸ் போஸ்ட்:
பேஸ்புக் கொண்டுவந்துள்ள வாய்ஸ் போஸ்ட் அம்சத்தில் வாடிக்கையாளர்கள் ஆடியோ நோட்களை ஸ்டோரீக்களாக பதிவு செய்ய முடியும், பின்பு புகைப்படங்களையும் சேமிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெட்வொர்க்:
இந்த புதிய வாய்ஸ் போஸ்ட் அம்சம் குறைந்த நெட்வொர்க் இருக்கும் பகுதிகளிலும் சீராக வேலை செய்யும் படி உருவாக்கப்பட்டுள்ளது என பேஸ்புக் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பயனர்களின் நியூஸ் ஃபீடில் மற்றவர்களும் வாய்ஸ் போஸ்ட்களை பதிவு செய்யும் வசதி கொண்டுவந்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.
ஸ்டோரீஸ் ஆர்ச்சிவ் அம்சம்:
பேஸ்புக் கொண்டுவந்துள்ள ஸ்டோரீஸ் ஆர்ச்சிவ் அம்சம் பயனர்கள் தங்களது ஸ்டோரீக்களை பார்க்கவும், ஷேர் செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த புதிய அம்சங்கள் வரும் வாரங்களில் பேஸ்புக் தளத்தில் சேர்க்கப்படும்.
பேஸ்புக் கேமரா:
குறிப்பாக பேஸ்புக் கேமரா மூலம் பதிவுசெய்யப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மட்டுமே பேஸ்புக் தளத்தில் சேமிக்க முடியும். மேலும் இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு செயலியில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பயனர்களுக்கு தகுந்தபடி இந்த புதிய அம்சங்கள் வெளிவந்துள்ளது.