BREAKING NEWS:எடியூரப்பாவுக்கு எதிராக தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம்!அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அதிரடி கட்சி!

Default Image

கர்நாடகா ஆளுநருக்கு எதிராக மாலை 5 மணிக்கு தமிழக காங்கிரஸ் போராட்டம் நடைபெறும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்பாட்டம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்  திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். பெரும்பான்மை இல்லாத எடியூரப்பாவுக்கு முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்ததாக குற்றச்சாட்டியுள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர்  திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். .

எடியூரப்பா முதலமைச்சரானதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவை வாயிலில் போராட்டம்: 

எடியூரப்பா முதலமைச்சரானதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவை வாயிலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், தலைவர்கள் தர்ணா ஈடுப்பட்டனர்.

எடியூரப்பாவுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள காந்தி சிலை முன்பு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங். தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெரும்பான்மையில்லாத நிலையில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சித்தராமையா, குலாம்நபி ஆசாத், மல்லிகாட்ஜூனே கார்கே, அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்.மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ்- மஜத எம்.எல்.ஏக்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.இதில் கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் நடக்கும் தர்ணா போராட்டத்தில் மஜத தலைவர் தேவகவுடா பங்கேற்ற்றுள்ளார்.மேலும்  கர்நாடக சட்டப்பேரவை முன்பு நடக்கும் காங். எம்எல்ஏக்களின் தர்ணா போராட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களும் பங்கேற்ற்றுள்ளனர்.

கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா:

Iஇன்று  கர்நாடகாவின் 23-வது முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா.கர்நாடகா மாநில முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார். ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.லிங்காயத் சமூகத்தை சேர்ந்த பாஜகவின் எடியூரப்பா 3 வது முறையாக கர்நாடக முதலமைச்சராகியுள்ளார் எடியூரப்பா.ஆனால் கர்நாடகத்தில் எடியூரப்பாவுடன் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.இதேபோல் பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கர்நாடகாவில் ரூ.56000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்து முதலமைச்சர் எடியூரப்பா முதல் கையெழுத்திட்டுள்ளார்.

 

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala