பிரதமரின் “விவசாயிகள் சித்திரவதை” திட்டம் – ராகுல் காந்தி
நண்பர்களுக்கு கடன் தள்ளுபடி ஆனால் விவசாயிகளுக்கு இல்லை என பிரதமர் மோடி குறித்து விமர்சித்து ராகுல் காந்தி ட்விட்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் அவ்வப்போது, மத்திய அரசின் திட்டங்களையும், பிரதமர் மோடி குறித்தும் விமர்சித்து கருத்து பதிவிடுவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பிரதமரின் “விவசாயிகள் சித்திரவதை” திட்டம். இறந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை. இறந்தவர்கள் குறித்து தரவுகள் இல்லை. நண்பர்களுக்கு கடன் தள்ளுபடி ஆனால் விவசாயிகளுக்கு இல்லை. MSP குறித்து பொய் வாக்குறுதி.
பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு ₹40000 கோடி லாபம். 2022 இல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கி இருக்கவேண்டும். ஆனால் தொல்லை தான் இரட்டிப்பு ஆகி இருக்கிறது.’ என விமர்சித்து கருத்து பதிவிட்டுள்ளார்.
பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு ₹40000 கோடி லாபம்.
2022 இல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கி இருக்கவேண்டும். ஆனால் தொல்லை தான் இரட்டிப்பு ஆகி இருக்கிறது. (2/2)
— Rahul Gandhi – Tamil Commentary (@RahulGandhi_TN) July 25, 2022