அழிந்துவரும் மோனார்க் பட்டாம்பூச்சிகள்!!
மோனார்க் பட்டாம்பூச்சிகள் சர்வதேச அளவில் அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. வட அமெரிக்க மோனார்க் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை 22% முதல் 72% வரை குறைந்துள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
2016 ஆம் ஆண்டில், கனடாவில் அழிந்து வரும் வனவிலங்குகளின் நிலை குறித்த குழுவால் மோனார்க் பட்டாம்பூச்சி அழிந்து வரும் நிலையில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது. இது உலகின் மிகவும் அடையாளம் காணக்கூடிய பட்டாம்பூச்சிகளில் ஒன்றாகும். வட அமெரிக்காவில் உள்ள மொனார்க் பட்டாம்பூச்சிகளின் மக்கள்தொகை 10 ஆண்டுகளில் 22 சதவீதம் முதல் 72 சதவீதம் வரை குறைந்துள்ளது.
மோனார்க் பட்டாம்பூச்சிகள் மத்திய மெக்ஸிகோவின் மலைகளில் குளிர்காலத்திற்குப் பிறகு, வடக்கே இடம்பெயர்கின்றன. ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பயணத்திற்கு நடுவே பல தலைமுறைகளை இனப்பெருக்கம் செய்கின்றன. பின் தெற்கு கனடாவை அடைந்து கோடையின் இறுதியில் மெக்ஸிகோவிற்கு மீண்டும் பயணத்தைத் தொடங்குகின்றன.
வாழ்விட இழப்பு, களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றால் மோனார்க் பட்டாம்பூச்சிகள் ஆபத்தில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கன்றது.