எனக்கு சந்தோஷம், நிம்மதி இல்லை.. நடமாடி கொண்டிருக்கும் போது போய் சேர்ந்து விட வேண்டும் – ரஜினி

Default Image

எனக்கு சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை என்று ஆன்மிக நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் ஓபன் டாக்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா சார்பில் நடந்த ஆன்மிக நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்த உலகத்தை விட்டு செல்லும்போது, சொத்து சேர்த்து வைத்து செல்வதை விட நோயாளியாக இல்லாமல் செல்வது முக்கியம். நோயாளியாக இருப்பது பிறருக்கு கஷ்டத்தை ஏற்படுத்தலாம். இதனால் உடல் ஆரோக்கியம் ஒருவருக்கு ரொம்ப முக்கியம். இல்லையென்றால் சந்தோசமாக மருத்துவமனை செல்லாமலேயே நடமாடி கொண்டிருக்கும் போது போய் சேர்ந்து விட வேண்டும். நான் கூட இரண்டு முறை மருத்துவமனை போயிடு வந்தவன்.

நான் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்த படங்கள் ராகவேந்திரா மற்றும் பாபா படங்கள்தான். இந்த படங்கள் வந்த பின்னர் அவர்களைப் பற்றி மக்கள் நிறைய தெரிந்து கொண்டார்கள். நிறைய பேர் இமயமலைக்கு சென்று வந்தார்கள். என் ரசிகர்கள் சிலர் சன்னியாசியாகவும் மாறி உள்ளனர். ஆனால், நான் இன்னும் நடிகராக உள்ளேன். இமயமலையில் இயற்கையாகவே சொர்க்கம் அமைந்துள்ளது. அங்குள்ள மூலிகைகள் சிலவற்றை சாப்பிட்டால் ஒரு வாரத்திற்கு புத்துணர்ச்சி இருக்கும்.

மேலும், வாழ்க்கையில் எல்லாவற்றையும் விட முக்கியம் நிம்மதி. என் வாழ்வில் பணம், புகழ், பெயர், பெரிய பெரிய அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என அனைத்தையும் பார்த்த எனக்கு சந்தோஷம், நிம்மதி 10 சதவீதம் கூட இல்லை. சித்தர்களிடம் உள்ள நிம்மதியில், மகிழ்ச்சியில் 10 சதவீதம் கூட எனக்கு இதுவரையில் கிடைக்கவில்லை என்று வெளிப்படையாக சற்றே கலங்கிப் போய் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்