நெப்டியூன் மற்றும் யுரேனஸ் மீது பொழியும் வைர மழை !

Default Image

சூரிய குடும்பத்தில் உள்ள யுரேனஸ் மற்றும் நெப்டியூன் இரண்டும் பனி நிறைந்த கிரகங்கள். தோற்றத்தின் அடிப்படையில் ஒரே மாதிரியான நீல நிறத்தை பகிர்ந்து கொள்கின்றன. இந்த கிரகங்களில் வைர மழை பொழிவதாக விஞ்ஞானிகள் நீண்ட காலமாக சந்தேகித்து வந்தனர்.

வானியல் இயற்பியலாளர் நவோமி ரோவ்-கர்னி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் இரண்டும் அவற்றின் வளிமண்டலத்தில் மீத்தேன் இருப்பதால் நீல நிறத்தில் தோன்றும். மீத்தேன் கார்பனால் ஆனது. இந்த கார்பன் அணுக்கள் தான் இந்த கிரகங்களின் வளிமண்டலத்தில் பொங்கி எழும் வெப்பநிலை மற்றும் தீவிர அழுத்த நிலைகள் காரணமாக வைரங்களாக மாறுகின்றன. இதுவே வைர மழைக்கு காரணம் என்று கூறினார்.

யுரேனஸ் சுழலும் திரவங்களால் ஆன ஒரு கிரகமாகும், நெப்டியூனின் வளிமண்டலம் அதிக ஆழத்திற்கு நீண்டுள்ளது. இரண்டு கிரகங்களுக்கும் மேற்பரப்பு இல்லை. இந்த இரண்டு கிரகங்களை ராட்சத விண்கலங்களாக பயன்படுத்தப்படலாம் என்று வினோதமான ஆய்வு கூறுகிறது. யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கிரகங்களில் மனிதர்கள் வாழ முடியாது.

யுரேனஸ் மற்றும் நெப்டியூன் மீது வைர மழை பற்றி முதன்முதலில் லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகத்தின் மார்வின் ராஸ் என்பவரால் 1981 ஆம் ஆண்டு கட்டுரையாக வெளியிடப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்