10 தேசிய விருதுகளை தட்டிச்சென்ற தமிழ் சினிமா… முழு விவரம் இதோ…
சூரரை போற்று திரைப்படம் 5 விருதுகளையும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு 3 விருதுகளும், மண்டேலா திரைப்படத்திற்கு 2 விருதுகளும் சேர்ந்து தமிழ் சினிமா 10 விருதுகளை தட்டி தூக்கியுள்ளது.
68வது தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் சினிமா 10 விருதுகளை தட்டி தூக்கியுள்ளது. மிக முக்கிய விருதான சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம் ஆகியவற்றை தமிழ் சினிமா கைப்பற்றியுள்ளது.
சிறந்த நடிகராக சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்ததற்காக சூர்யா மற்றும் தன்ஹாஜி எனும் பாலிவுட் திரைப்படத்தில் நடித்த அஜய் தேவ்கன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
சிறந்த நடிகை- அபர்ணா பாலமுரளி (சூரரைப்போற்று), சிறந்த திரைக்கதை – சூரரை போற்று (சுதா கொங்காரா), சிறந்த பின்னணி இசை – ஜிவி பிரகாஷ், சிறந்த படம் – சூரரைப் போற்று,
சிறந்த தமிழ் படம் – சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும், சிறந்த வசனம் – மண்டேலா (மடோனா அஸ்வின்), சிறந்த அறிமுக இயக்குனர் – மடோனா அஸ்வின் (மண்டேலா ), சிறந்த துணை நடிகை – லட்சுமி பிரியா சந்திரமௌலி (சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்), சிறந்த எடிட்டிங் – ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்) போன்ற விருதுகளை தமிழ் சினிமா தட்டி சென்றது.