தான்சானியாவில் மர்மமான காய்ச்சலுக்கு 3 பேர் பலி
COVID-19 தொற்றுநோய்க்கு மத்தியில், தான்சானியா தற்போது மர்மக் காய்ச்சல் பரவிவருகிறது.
தான்சானியா நாட்டில் எலிக்காய்ச்சல் எனப்படும் மர்ம நோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் அந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோயானது விலங்குகளிடமிருந்து பரவும் அரிதான பாக்டீரியா தொற்று. இது சிறுநீர் மூலம், குறிப்பாக நாய்கள், எலி மற்றும் பண்ணை விலங்குகளிடமிருந்து பரவுகிறது.
மேலும் அசுத்தமான உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்வதன் மூலம் பரவியிருக்கலாம் என்று தான்சானியா சுகாதார அமைச்சர் உம்மி மைலிமு தெரிவித்துள்ளார்.