#Scorpio N: ஆட்டோமேட்டிக் & ஃபோர்-வீல் டிரைவ் வகைகளின் விலையை வெளியிட்ட மஹிந்திரா
மஹிந்திரா ஆட்டோமேட்டிக் & ஃபோர்-வீல் டிரைவ் புது மாடல்களின் விலையை வெளியிட்டது.
SUVயின் லேட்டஸ்ட் வெர்ஸனை ஜூன் 27 அன்று Z2, Z4, Z6, Z8 மற்றும் Z8L ஆகிய ஐந்து வகைகளில் அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் நேற்று(ஜூலை 21) மஹிந்திரா&மஹிந்திரா தனது புதிய ஸ்கார்பியோ-என் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் & ஃபோர்-வீல் டிரைவ்(4WD) வகைகளுக்கான அறிமுக விலைகளை அறிவித்தது.
Scorpio-N இன் பாதுகாப்பு அம்சங்களில் ஆறு ஏர்பேக்குகள், மடிக்கக்கூடிய ஸ்டீயரிங் நெடுவரிசை மற்றும் டிரைவர் தூக்கத்தைக் கண்டறியும் அமைப்பு ஆகியவை அடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய ஸ்கார்பியோ-என் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் வருகிறது.
பெட்ரோல் எஞ்சினுடன் கூடிய Z4 வேரியன்ட் ரூ.15.45 லட்சம் மற்றும் Z8L (டீசல்) ரூ.21.45 லட்சம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
4WD (ஃபோர்-வீல் டிரைவ்) அம்சம் Z4, Z8 மற்றும் Z8L டீசல் வகைகளில் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வாகனத்திற்கான முன்பதிவு ஜூலை 30 முதல் தொடங்கும் எனவும், மேலும் அதன் டெலிவரி செப்டம்பர் 26 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் 20,000 முன்பதிவுகளுக்கு வாகனம் அறிமுக விலையில் கிடைக்கும்.
ஸ்கார்பியோவின் முந்தைய வெர்ஸன்களும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.