#CBSEResult2022: சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in மற்றும் results.cbse.nic.in என்ற சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். அதன்படி, மாணவர்கள் தங்களின் போர்டு தேர்வு பட்டியல் எண், பிறந்த தேதி மற்றும் பள்ளி குறியீடு ஆகியவற்றைப் உள்ளிட்டு இந்த இணையதளங்களில் இருந்து தங்கள் மதிப்பெண் அட்டைகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு CBSE 12ம் வகுப்பு தேர்வில் 92.71 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் 7% குறைந்துள்ளது. சிபிஎஸ்இ தேர்வில் 98.82% தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. இதுபோன்று 98.16% தேர்ச்சியுடன் பெங்களூரு இரண்டாம் இடத்திலும், 97.79% தேர்ச்சியுடன் சென்னை மூன்றாவது இடத்திலும் உள்ளன. இதனிடையே, CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.