தமிழகத்தில் இன்று 2,093 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு..!
தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 2,093 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.
நேற்று 2,116 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 2,093 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 516 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்று மட்டும் 2,290 குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர்.