டெல்லி ஹோட்டலில் குடியரசு தலைவருக்கு பிரியா விடை தரும் பிரதமர் மோடி… விழா ஏற்பாடுகள் தீவிரம்.!

Default Image

ஜூலை 22ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு டில்லியில் உள்ள அசோகா எனும் ஹோட்டலில் தற்போதைய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விருந்து அளிக்க உள்ளார். 

இந்தியாவின் 14வது குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் அவற்களின் பதவிக்காலம் வரும் (ஜூலை) 24ஆம் தேதி நிறைவடைகிறது. 25ஆம் தேதி புதிய குடியரசு தலைவர் பதவி ஏற்க உள்ளார்.

இந்த நிலையில், தற்போதைய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 22ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு டில்லியில் உள்ள அசோகா எனும் ஹோட்டலில் விருந்து அளிக்கிறார்.

பிரதமர் மோடி கடைசியாக குடியரசுத் தலைவர் கோவிந்தை ஜூலை 13-ம் தேதி ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் ஜூலை 25, 2017 அன்று பதவியேற்றார். உத்தர பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு 1994 இல் முதன்முதலில் அரசியலில் அடியெடுத்து வைத்தார். அவர் மார்ச் 2006 வரை 12 ஆண்டுகள் தொடர்ந்து இரண்டு முறை பதவி வகித்தார். பின்னர் 2015-2017 க்கு இடையில் பீகார் ஆளுநராக பணியாற்றினார்.

வாக்கு எண்ணிக்கையில் திரௌபதி முர்முவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்துள்ளதால், அடுத்த ஜனாதிபதியாக அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது என்கிற வாக்கு எண்ணிக்கை நிலவரம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்