சீன வங்கியில் நிதி நெருக்கடி! போராட்டத்தில் மக்கள் ! தடுக்க நிறுத்தப்பட்ட பீரங்கி வண்டிகள்.

Default Image

சீனா: நிதி நெருக்கடியால் முடங்கிய சீன வங்கி ஒன்றிலிருந்து பொது மக்கள் பணம் எடுக்க முற்பட்ட பொழுது  நுழைவுவாயிலை பீரங்கி கொண்டு மறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வங்கி நிதி நெருக்கடிக்கு உள்ளானதால் அதில் கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகள் மூடப்பட்டன. இதன் காரணமாக ஹெனான் மாகாணத்தில் கடந்த பல வாரங்களாக தங்கள் பணத்தை மீட்டு தருமாறு போலீஸாருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே மோதல்கள் நடந்து வருகின்றன.

போராட்டம் தீவிரமடைவதை தடுப்பதற்காக தெருக்களில் பீரங்கி வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன.

இந்த சம்பவம் 1989ல் நடந்த தியனன்மென் சதுக்கப் படுகொலையின் கொடூரமான நினைவூட்டல் என ஊடக பயனாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்